இந்திய அணிக்கு நாளை வாழ்வா சாவா போட்டி! திடீரென பயிற்சி ஆட்டம் ரத்து; தோனியின் ட்விஸ்ட்
ஐசிசி டி20 உலககோப்பை போட்டியானது அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது.
பி பிரிவில், பாகிஸ்தான் அணி மூன்று வெற்றிகளுடன் முதலிடத்திலும், இரண்டாவது இடத்திற்கு மற்ற அணிகளான நியூசிலாந்து, மற்றும் இந்தியா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த இரு அணிகளும் நாளை நடைபெறும் போட்டியில், யார் வெற்றி பெறுவார்களே அவர்களை இரண்டாவது இடத்திற்கான பிரகாசமான வாய்ப்பை பெறுவார்கள்.
கிட்டத்தட்ட சொல்லப்போனால், இந்த போட்டி இரு அணிக்கும், வாழ்வா சாவா? போட்டியாக தான் இருக்கப்போகிறது. இந்த நிலையில், இப்படிப்பட்ட முக்கியமான போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயார் ஆகி வருகின்றனர்.
இந்திய அணியின் ப்ளேயிங் 11-ல் முக்கிய மாற்றம் நிகழப்போகிறது. நேற்றைய தினத்தில், முக்கிய பயிற்சி போட்டி இருந்தது. ஆனால் அது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இந்திய அணி தற்போது துபாயில் உள்ள தி பால்ம் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள ஐசிசி அகாடமியில் தான் பயிற்சியை மேற்கொண்டனர். ஆனால், ஐசிசி உத்தரவின்படி திடீரென அபிதாபிக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
ஆனால், இந்திய அணி அபிதாபிக்கு செல்ல இரண்டு மணிநேரம் ஆகும் என்பதால், மொத்த 4 மணி நேரம் பயிற்சி போதாதது என பயிற்சி வேண்டாம் என அறிவித்து இருக்கின்றனர்.
இதனிடையே, பயிற்சியை ரத்து செய்ததால், சில வீரர்கள் ஓய்வு எடுக்க மற்ற வீரர்களை தோனி திடீரென துபாய் கடற்கரைக்கு அழைத்து சென்று வாலிபால் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.. மேலும் உடற்தகுதி தேர்வுகள் இன்றைக்கான பயிற்சி போட்டியில் நடைபெறுமாம்.