40 வயது கடந்தவர்களை குறி வைக்கும் காசநோய்: இந்த அறிகுறி இருந்தால் ஆபத்து!
பொதுவாக தற்போது இருக்கும் 40 வயதிற்கு மேற்ப்பட்டவர்களை தாக்கும் காசநோய் அல்லது TB என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு வகையான தொற்று நோயாகும்.
மேலும் காசநோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் வீதம் 90% சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2016ம் பாதிக்கப்பட்ட பெரியவர்கள், இந்தியா, இந்தோனேசியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற ஐந்து நாடுகளில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் தும்மலின் போது சிறிய நீர்த்துளிகளாக டியூபர்குலோசிஸ் பாக்டீரியா ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இடம் மாறி தொற்று அதிகரிக்கின்றது.
மேலும் ஆக்டிவ் நுரையீரல் காசநோய் உள்ள நோயாளி ஒருவர், இருமும்போது, பேசும்போது, தும்மும்போது, பாடும்போது அல்லது சிரிக்கும் போது என அனைத்து சந்தர்ப்பங்களிலும் காசநோய் பரப்பப்படுகிறது.
அந்த வகையில் காச நோயின் அறிகுறிகள், காரணங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
காச நோயிற்கான அறிகுறிகள்
- விவரிக்க முடியாத காய்ச்சல், நாள்பட்ட இருமல் ஏற்படும்.
- இரவு நேரங்களில் அதிக வியர்வை.
- பசியின்மை குறைதல் அல்லது பசியிழப்பு, விவரிக்க முடியாத எடை இழப்பு திடீரென நெஞ்சு வலி ஏற்படல்.
- மூச்சுத் திணறல் ஏற்படல்.
- வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு
காச நோய்க்கான காரணங்கள்
- சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுதல்.
- ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சிலிக்கோசிஸ்
- அதிகபடியான புகையிலை பயன்பாடு
- பொதுவாக முடக்கு வாதம், தடிப்புத் தோல்
- அழற்சி மற்றும் கிரோன் நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள்
- அதிகப்படியான வறுமை
- எச்.ஐ.வி தொற்று மற்றும் நீரிழிவு நோயாளிகள் அதிக போதைப் பொருள் பாவனை