உயர் இரத்த ழுத்தம் இருந்தால் தென்படும் முக்கிய 7 அறிகுறிகள்
உயர் ரத்த அழுத்த பிரச்சனையினால் நாம் சந்திக்கும் முக்கியமான அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ரத்த அழுத்தம்
நமது ரத்த நாளங்கள் வழியாக இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் வேகத்தினை தான் ரத்த அழுத்தம் என்கின்றோம்.
இதயத்திற்கு செல்லும் ரத்தம் மட்டுமின்றி இதயத்தில் இருந்து வெளியே வரும் ரத்தத்தின் வேகமும் இதில் அடங்குகின்றது.

குறைந்த இரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் என இரண்டு பிரச்சனைகளை நாம் சந்திக்கலாம். உயர் ரத்த அழுத்தம் நீடித்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அபாயம் அதிகரிக்கும்.
இவ்வாறான சூழ்நிலையில், ரத்த அழுத்தத்தினை சரியான அளவில் கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியமாகும். உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
அறிகுறிகள் என்ன?
ரத்தம் அழுத்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அபாயத்தை குறைக்கலாம்.
காலையில் எழுந்ததும் சோர்வாக உணர்ந்தால், இரவில் அதிகரித்த ரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கும்.

கழுத்து மற்றும் தோள்களில் விறைப்பு ரத்த நாளங்களில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
காரணம் இல்லாமல் ஏற்படும் பதற்றத்தை நீங்கள் உணர்ந்தால் உங்களது நரம்பு மண்டலம் அதிகமாக செயல்படுவதாக கூறப்படுகின்றது.

அவ்வப்போது இரவில் தூக்க பிரச்சனை காணப்பட்டால், இரவு முழுவதும் உயர்ந்த கார்டிசோல் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறிக்கலாம்.
கண்களில் அழுத்தத்தை உணர்ந்தால், உயர் ரத்த அழுத்தத்தின் ஒரு அமைதியான அறிகுறியாக இருக்கும்.

தலையின் பின்புறத்தில் வலி அதிகமாக உணர்ந்தால், இரவில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகும். நீங்கள் எதுவும் செய்யாமல் அதிகமாக வியர்த்தால் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறி.

யாருக்கு இந்த அறிகுறி ஏற்படும்?
அதிகளவில் சோடியம் உட்கொள்பவர்கள், குறைந்த பொட்டாசியம் உணவு உட்கொள்பவர்களுக்கு இந்த அறிகுறி ஏற்படும்.
உடல் செயல்பாடு இல்லாத காரணத்தினால், அதிகமான மது மற்றும் காபி அருந்துதல் காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்படும்.

புகையிலை பயன்படுத்துபவர்கள், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தினால் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் உயர்வாக இருக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |