இந்த அறிகுறிகளை புறக்கணிக்கிறீர்களா? அப்போ பெருங்குடல் புற்றுநோய் உறுதி
உலகில் அதிக மக்கள் இறந்துபோகும் பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது.
3.2 மில்லியனாக உயரும்
உலகில் புற்றுநோயால் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் பெருங்குடல் புற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில், 1.9 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது உலகளவில் 930,000 உயிர்களைக் காவு வாங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ( WHO ) தெரிவித்துள்ளது.
இது இப்படியே தொடர்ந்தால் 2040 ஆம் ஆண்டுக்குள் புதிய பெருங்குடல் புற்றுநோய் வழக்குகள் ஆண்டுக்கு 3.2 மில்லியனாக உயரும் என்றும், இறப்புகள் ஆண்டுக்கு 1.6 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் நிறுவனம் கணித்துள்ளது.
எனவே ஆரம்பத்தில் பெருங்குடல் சம்பந்தப்பட்ட நமது உடலில் காட்டும் புற்றுநோய் அறிகுறிகளை கண்டறிந்து அதை விதையிலேயே கிள்ளி வீசுவது சிறந்தது.
அறிகுறிகள் என்ன?
குடல் பழக்க மாற்றங்கள் - குடல் பழக்கத்தில் ஏற்படும் எந்த மாற்றங்களையும் எளிதில் நிராகரிக்கக்கூடாது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது குடல் முழுமையாக காலியாக இல்லை என்ற உணர்வு போன்ற குடல் உணர்வுகள் பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும்.
இது உணவு மாற்றத்தாலும் மன அழுத்தத்தாலும் உண்டாகின்றது என நினைத்து மக்கள் இதை புறக்கணிக்கிறார்கள். இருப்பினும், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலம் குறுகுவது ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தால், நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
மலத்தில் இரத்தம் - பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறி மலத்தில் இரத்தம் கலந்து வருவது. இப்படி மலத்தில் ரத்தம் வரும் போது பிரகாசமான சிவப்பு அல்லது அடர் இரத்தம் தெரிந்தால், உடனடி மருத்துவ உதவி தேவை.
இந்த அறிகுறிகளை மக்கள் பெரும்பாலும் மூல நோய் அல்லது சிறிய இரைப்பை குடல் பிரச்சனைகள் என நினைத்து நிராகரிக்கின்றனர். ரத்தம் வருவதற்கு இது ஒரு காரணியாக இருந்தாலும் மலக்குடல் இரத்தப்போக்கை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.
WHO இன் இறிக்கை படி, மலத்தில் உள்ள இரத்தம், பிரகாசமான சிவப்பு அல்லது அடர் மற்றும் தார் போன்றது, இது பெருங்குடல் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.
வயிற்று அசௌகரியம் - அடிக்கடி வயிற்றுப் பிடிப்புகள், வலி அல்லது நீங்காத வீக்கம் போன்ற அறிகள் வந்தால் கவனம். இது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
முதலில் இதற்கு மருத்துவரின் சிகிச்சை அவசியம். இதை மீறி இது தொடர்ந்தால் அது கவனிக்க வேண்டிய விடயம். பலர் இதை எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி அல்லது வாயு என்று தவறாக நினைக்கிறார்கள்.
உங்களுக்கு தொடர்ந்து வயிற்று வலி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
விவரிக்கப்படாத எடை இழப்பு - அதாவது முயற்சி செய்யாமல் எடை இழப்பது ஒருபோதும் நல்ல அறிகுறி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
திடீரென, தற்செயலாக எடை இழப்பு என்பது பெருங்குடல் புற்றுநோய் உட்பட புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் . உணவு அல்லது உடற்பயிற்சியில் மாற்றங்கள் இல்லாமல் நீங்கள் 10 கிலோக்களுக்கும் மேலாக எடை இழந்தால் அதை மருத்துவரின் ஆலாசனையில் விடுவது நல்லது.
நாள்பட்ட சோர்வு - ஓய்வுக்குப் பிறகும் கூட, எப்போதும் சோர்வாக இருப்பது உடலில் ஒரு மோசமான அறிகுறியாகும். சோர்வு என்பதை பலரும் புறக்கணிப்பதில் சிறந்தவர்கள். இதை மக்கள் வேலை அல்லது மன அழுத்தம் காரணமாகக் வருகின்றது என நினைக்கிறார்கள்.
ஆனால் இது பெருங்குடல் புற்றுநோயின் ஒரு அறிகுறியாகும். பெருங்குடல் புற்றுநோய் உட்புற இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இதனாலும் சோர்வாக உணர்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |