கட்டிகள் மட்டுமல்ல, இதுவும் புற்றுநோயின் அறிகுறிகள் தான்- கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களை மார்பு மற்றும் உள்ளகபகுதிகளில் புற்றுநோய்கள் அதிகமாக தாக்குகின்றன.
இவ்வாறு ஏற்படும் புற்றுநோய்கள் அதன் தாக்கத்தின் அடிப்படையில் வகைகளாக பிரிக்கின்றது. அதில் முதல் இடத்தில் இருக்கும் வகை தான் மார்பகப் புற்றுநோய்.
இந்த பிரச்சினை வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், ரசாயனங்களுக்கு வெளிப்பாடு, ஹார்மோன்கள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றது.
மேலும் மார்பகப் புறு்றுநோயை மார்ப்பகங்களில் ஏற்படும் சிறுசிறு கட்டிகள் வைத்து தான் நோயாளர்களும் மருத்துவர்களும் இனங்காணுவார்கள்.
ஆனால் இவற்றையும் தாண்டி சில அறிகுறிகள் இருக்கின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கின்றதா?
Image - healthshots
- மார்பு பகுதியில் இருக்கும் காம்பிலிருந்து ரத்தம் வெளியேறுதல்.
- மார்பகப் பகுதியில் இருக்கும் காம்பு சற்று மடங்கியிருத்தல், மற்றும் அதனை சுற்றி தோல் உரிதல்.
- நிண நீர் கணுக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அக்குள் பகுதிகளில் வீக்கம் ஏற்படுதல்.
- மார்பு பகுதியிலில் இருக்கும் தோல் சிவந்து காணப்படல் மற்றும் காயங்கள் சிவப்பு, ஊதா அல்லது நீல நிறத்தில் காணப்படுதல்.
- அப்பகுதியிலுள்ள தோலின் அமைப்பு கடினமாகுதல் அல்லது மார்பகம் அல்லது காம்பு பகுதி மென்மையாக காணப்படல்.
- இதனை தொடர்ந்து உங்களுக்கு இருக்கும் மார்புபகுதியில் திடீர் மாற்றம். அதாவது( வடிவம், அளவு)
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்
Image - dosomething
சுமார் 20 – 30 வயது எல்லையில் இருப்பவர்கள் மார்பகத்தை சுய பரிசோதனை செய்து கொண்டு இது தொடர்பில் விழிப்புணர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
31 – 40 வயது எல்லையில் இருக்கும் பெண்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
41 – 55 இடைப்பட்ட வயதில் இருக்கும் பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை “மேமோகிராம் சிகிச்சை” மேற்கொள்ள வேண்டும்.
55 வயதிற்கு மேல் இருக்கும் பெண்கள் வருடத்திற்கு இரண்டு தடவைகள் “மேமோகிராம் சிகிச்சை” மேற்கொள்ள வேண்டும்.
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்
Image - The News Minute
பொதுவாக பெண்களுக்கு மார்பகப் பகுதியில் கட்டிகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் புற்றுநோயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
BRCA, PTEN, TP53 போன்ற மரபனு மாற்றத்துக்கு உண்டான ஆண்/பெண் ஆபத்தான பிரிவையுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளார்கள்.
ஒரு குடும்பத்தில் பலருக்கு புற்றுநோய் பிரச்சினை இருந்தால் தனி நபராக சென்று இது தொடர்பான பரிசோதனைகளை எடுத்து கொள்வது சிறந்தது.
புற்றுநோய்களில் கதிர்வீச்சு பாதிப்பு, நிணநீர் சுரப்பி புற்றுநோய் இருப்பவர்கள் மற்றும் ஹைப்பர் பிளேசியா அல்லது லோபுலர் கார்சிநோமா இருப்பவர்கள் அதிகமான ஆபத்தை கொண்டவர்கள். இப்படியான நிலையில் இருப்பவர்கள் அடிக்கடி பரிசோதனைகள் செய்து கொள்ளல் வேண்டும்.