பகத் பாசிலை தாக்கிய ADHD நோய்.. வெளிபாடுகள் எப்படி இருக்கும்?
நடிகர் பகத் பாசிலை தாக்கிய ADHD நோய் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாசிலின் மகனான பகத் பாசில் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சமிபத்தில் வடிவேல் நடித்த மாமன்னன் படத்தில் முக்கிய வேடத்தில் வந்து கலக்கியிருப்பார்.
இந்த படம் வெளியான போது மீம்ஸ் கிரியேட்டர்கள் பகத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
ADHD நோயின் வெளிபாடு
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பகத்திற்கு ADHD எனப்படும் Attention-deficit/Hyperactivity disorder நோய் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில் இந்த நோய் குறித்து போதியளவு விளக்கமில்லாமல் இருக்கிறார்கள்.
அந்த வகையில், ADHD எனப்படும் நோயானது ஒரு வகை நரம்பியல் நோய் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். Attention-deficit/Hyperactivity disorder என பெயர் கொண்ட இந்த நோய் குழந்தைகளுக்கு வந்தால் ஹைப்பராக இருப்பார்கள்.
அவர்களால் ஒரு இடத்தில் பேசாமல் இருக்க முடியாது. மாறாக அவர்கள் எதையாவது செய்து கொண்டே இருப்பார்களாம்.
நோயிலிருந்து வெளியே வருவது எப்படி?
அதே வேளை பெரியவர்களுக்கு ADHD நோய் வந்தால் மறதி, படபடப்பு, அமைதியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இதனால் ஒரு நேரத்தில் ஒழுங்காக ஒரு வேலையை செய்ய முடியாது. குறிப்பிட்டதொரு வேலை செய்து கொண்டிருக்கும் போது கவனச்சிதறல் ஏற்படும்.
இதனால் அவர்கள் மனழுத்தத்திற்கு ஆளாகுவார்கள். ADHD நோயிலிருந்து வெளியேறுவதற்கு தியானம், மனநல தெரப்பிகள் போன்ற சிகிச்சைகளில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |