கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சாம்யின் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணி! குவியும் வாழ்த்துக்கள்
சையத் முஷ்டாக் அலி டி20 இறுதிப்போட்டியில் தமிழ் நாடு அணி வெற்றிப்பெற்று கோப்பையை வென்றுள்ளது.
சையத் முஷ்டாக் அலி டி20க்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லியில் நடைப்பெற்றது. இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த கர்நாடகா அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ரோஹன் கடம் (0), மணிஷ் பாண்டே (13) ஆகிய இருவரையும் தொடக்கத்திலேயே தமிழ்நாடு அணி சுருட்டியது.
இதன் பின்னர் வந்த கருண் நாயர் 18 ரன்னில் ஆட்டமிழக்க, எஸ்.ஆர்.ஷரத்தை 16 ரன்னில் சாய் கிஷோர் வீழ்த்தினார். அபாரமாக பந்துவீசிய சாய் கிஷோர் 4 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஒரு கட்டத்தில், பிரவீன் துபே 33 ரன்களும் அடிக்க, ஜெகதீஷா சுஜித் டெத் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாச 20 ஓவரில் கர்நாடகா அணி 151 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில், 152 ரன்கள் எடுத்தால் வெற்ற்இ என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ் நாடு அணி நிதானமான ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டத்திலேயே ஹரி நிஷாந்த் (23), ஜகதீசன் (41) ரன்களும் சேர்த்தனர்.
ஆனால் இதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க அப்போது களமிறங்கிய இளம் வீரர் ஷாருக்கான், கர்நாடகா அணி பந்துவீச்சை நான்காம் பக்கமும் அடித்து துவம்சம் செய்தார்.
பின்னர், கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற பரபரப்பில், அந்த ஓவரின் முதல் பந்து பவுண்டரிக்கு செல்ல அடுத்த 4 பந்துகளில் 2 வைட்கள் மற்றும் 5 ஓட்டங்கள் கிடைத்தன.
இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஷாருக்கான் சிக்ஸருக்கு தூக்கி விளாச 4 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன்பட்டம் வென்றது தமிழ்நாடு அணி.
That six from @shahrukh_35 & the win of TeNacity! ??#SyedMushtaqAliTrophy #WhistlePodu ?pic.twitter.com/v59xIrRgSg
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) November 22, 2021
Shahrukh Khan wins the SMAT trophy for Tamil Nadu by hitting a six on the final ball ??#SyedMushtaqAliT20 #SyedMushtaqAliTrophy #ShahRukhKhanpic.twitter.com/8EYAWEmzMx
— CRICKET VIDEOS ? (@AbdullahNeaz) November 22, 2021