கோப்பையை வென்றபின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட தமிழ்நாட்டு அணி; வைரல் வீடியோ
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது.
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை காப்பாற்றிய ஷாருக்கிற்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிய தமிழ்நாட்டு அணிக்கு வெளிநாட்டு வீரர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மேலும், கோப்பையுடன் விளையாட்டு வீரர்கள் புகைப்படத்தினை பதிவிட்டு வர, தற்போது வத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் ஒன்றிணைந்து கோப்பையை ஏந்தியவாறு விஜய் சங்கருடன் நடனமாடி இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
you may like this...