பொருளாதார நெருக்கடி.. 30 ஆண்டுக்கு ஏலத்துக்குவிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய தீவு!
இலங்கையில், கல்பிட்டி தீவுக்கூட்டத்தில், உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவு ஆன, 1500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவு வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான சர்ச்சைக்கு காரணமான கச்சத்தீவை இந்தியாவிடமே இலங்கை கொடுக்குமா? அல்லது நீண்டகால குத்தகைக்கு தருமா? என்கிற எதிர்பார்ப்பும் விவாதமும் எழுந்துள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்ற நிலையில், இலங்கையில் உள்ள முக்கிய தீவுகளில் ஒன்றான உச்சமுனி தீவை சுவிஸ் நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்துள்ளது.
பூனைக்கு நாய்க்கு உண்டாகும் செல்ல சண்டை - காண்போரை ரசிக்க வைத்த அழகிய காணொளி!
மேலும், சுவிஸ் நிறுவனம் ஒன்றுக்கு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் கையெழுத்திடப்பட்டது.
ஏற்கனவே, இந்தியாவால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கோரிக்கை. தற்போதைய, சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா ஏராளமான கடனுதவி வழங்கி வருகிறது.
இதனால் கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இந்தியா திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது