பூனைக்கு நாய்க்கு உண்டாகும் செல்ல சண்டை - காண்போரை ரசிக்க வைத்த அழகிய காணொளி!
இன்றைய காலக்கட்டத்தில், பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது உண்டு.
அதிலும், விலங்குகள் சம்பந்தமான வீடியோக்கள் அதிகமாக பரவி வரும். அந்த வகையில், குறிப்பிட்ட வீடியோ காட்சியில், பூனைக்குட்டியிடம், நாய்க்குட்டி சண்டை போடுகிறது.
அதில், சோஃபாவிற்கு கீழே நாய்க்குட்டி ஒன்றும், பூனைக்குட்டி ஒன்றும் எதிரெதிரே அமர்ந்திருக்கிறது. இரண்டு விலங்குகளுக்கும் இடையே அழகிய எலிக்குட்டி ஒன்று அமைதியாக அமர்ந்து இருக்கிறது.
மேலும், எலிக்குட்டியை பூனைக்குட்டி தொந்தரவு செய்ய முயல்கிறது, ஆனால் திடீரென்று எலிக்குட்டிக்கு பாடிகாட் போன்று நாய்க்குட்டி குறுக்கே புகுந்து பூனைக்குட்டியை தடுக்கிறது.
பூனை, எலியை தொந்தரவு செய்யவிடாமல் நாய்க்குட்டி மிரட்டுகிறது, பின்னர் அந்த நாய்க்குட்டி பந்தாவாக சோஃபா மீது ஏறி அமர்ந்துகொண்டு பூனைக்குட்டியை மிரட்டுகிறது.
இந்த வீடியோ காட்சியானது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தண்டவளத்தை கடக்க முயன்ற யானை! வேகமாக வந்த ரயில்: நடந்தது என்ன?
Leave him alone ?.... pic.twitter.com/Hjk47siQvI
— Dr.Samrat Gowda IFS (@IfsSamrat) May 11, 2022