H1N1 virus: பன்றிக்காய்ச்சல் ஆபத்து யாருக்கு அதிகம்? இந்த அறிகுறிகளை அலட்சிப்படுத்தாதீங்க
பன்றி காய்ச்சல் (swine flu) பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது இன்ப்ளூயன்சா (influenza) என்னும் வைரஸ் பரவலால் ஏற்படுகின்றது.
இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களையே அதிகம் தாக்குகின்றது.
இந்த நோய் தனிதர்களை தாக்கினால், மனிதரின் உடலுக்குள் இத்தீநுண்மம் மரபணுவில் விரைவாக மாற்றத்தை ஏற்படுத்தும் இதனால் வைரல் தொற்று மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது. இது விரைவாக மற்றவர்களுக்கு பரவக்கூடய வைரசாக பார்க்கப்படுகின்றது.
H1N1 என்னும் இந்த இன்ப்ளூயன்சா வைரஸ் முதன்முதலில் கடந்த 2009 ஆம் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. அப்போது இதை பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் (world health organization) அறிவித்தது.
இதனை முன்கூட்டியே கட்டுப்படுவது சிறந்தது ஆகும். இந்த தொற்று எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன, சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
முக்கிய அறிகுறிகள்
H1N1 வைரஸ் தொற்றால் தாக்கப்பட்மால், கடுமையான இருமல், மூக்கு ஒழுகுதல், பசியின்மை, சோர்வு, ஓயிவின்மை ஆகிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சலைப் போன்று தான் இருக்கும்.
வைரஸ் தொற்று உடலில் பரவிய பின்னரே அதன் அறிகுறிகள் வெளிப்பம ஆரம்பிக்கும். வைரஸ் தொற்று ஏற்பட்டு அறிகுளிகள் தெரிய குறைந்த பட்சம் நான்கு நாட்களாகும்.
இருமல், சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், பசியின்மை, வாந்தி, டயேரியா போன்றவை H1N1 வைரஸ் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது.
பன்றிக்காய்ச்சலின் தாக்கம் குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் (வயதானவர்களுக்கு) கர்ப்பிணி பெண்கள், நாள்பட்ட நுரையீரல் பிரச்சினைகள், நீரிழிவு உள்ளவர்கள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமானவர்கள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களில் அதிகமாக இருக்கும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்தை பேணுவது மிகவும் முக்கியமாகும். அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நோய் பரவல் அதிகரிக்கும் காலகட்டங்களில் யாரிடமும் கைகுலுக்குவதை தவிர்க்கலாம்.ஒரு நாளைக்கு இரண்டு முறை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நோய் தொற்றை தடுக்க பெரிதும் துணைப்புரியும்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்ககளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும்.
சூப் போன்ற சூடான திரவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால்ஈ தொண்டைப்பகுதியில் தங்கியிருக்கும் வைரஸ் உந்தி வயிற்றுப்பகுதியை நோக்கி தள்ளப்படும். அதனால் வயிற்றில் உள்ள அமிலங்கள் நோய்கிருமிகளை அதழத்துவிடும்.
வைரஸ் தொற்று துரையீரலை தாக்காமல் இருக்க அடிக்கடி சூடான தண்ணீர் குடிப்பதும் சிறந்த பாதுகாப்பு முறையாக பார்க்கப்படுகின்றது.
சிகிச்சைகள்
பன்றிக் காய்ச்சலுகு தனியாக மருந்துகள் கொடுக்கப்படுவது கிடையாது. பொதுவாக வைரஸ் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் ஆன்டி - வைரஸ் மருந்துகள் தான் கொடுக்கப்படுகின்றது.
ஆனால் நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்றுக்கள் ஏற்படாமல் இருப்பதற்கான ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றது.
ன்றிக்காய்ச்சலுக்கென்று ஆரம்பத்தில் போதிய ஆன்டி வைரஸ் மருந்துகள் இல்லாமல் இருந்தது. தற்போது மருந்துகள் கிமைக்கும் நிலையிலும் 90 சதவீதம் சுகாதார நடிவடிக்கைகள் மூலம் தான் பன்றி காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். எனவே சுகாதார வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மருவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |