சரும அழகுக்கு சாத்துக்குடி!
நமது அழகை மெருகேற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்கிறோம். எவ்வளவு விலையாக இருந்தாலும் கடைகளில் விற்கும் அழகுசாதனப் பொருட்களை வாங்குகிறோம்.
ஆனால், இலகுவாக எந்நேரத்திலும் கிடைக்கக்கூடிய பொருட்களை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது? அவ்வாறான ஒரு பொருள்தான் சாத்துக்குடி.
சுவீட் லைம் என்று கூறப்படும் சாத்துக்குடியானது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
இதில் இரும்பு, விட்டமின் ஏ, விட்டமின் சி, கல்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
சாத்துக்குடியில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் வயது முதிர்ச்சியினால் ஏற்படும் சரும மாற்றத்துக்கு எதிராக போராடும்.
உடலிலுள்ள நச்சுக்களை அகற்றும் செயல்முறை சரியான இடைவெளியில் நடப்பது அவசியமாகும். அவ்வாறு நடந்தால்தான் சருமத்துக்கு ஊட்டம் கிடைக்கும். அதுமட்டுமின்றி எந்த பாதிப்பும் ஏற்படாது. முகப்பரு பிரச்சினைகளும் ஏற்படாது.
இதில் உள்ள ஒட்சிசன் பண்புகள் மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கண்புரை உருவாகுவதை தடுக்கிறது. அதுமட்டுமின்றி இந்த சாத்துக்குடியில் ஜூஸ் செய்து பருகுவதோடு மட்டுமின்றி ஃபேஷியலாகவும் உபயோகப்படுத்தலாம்.
சருமத்தில் படிந்துள்ள கறைகளை அகற்றி, ப்ளீச்சிங் செய்வதற்கும் பயன்படும். இவ்வாறு எண்ணற்ற பல நன்மைகள் செய்யவல்லது சாத்துக்குடி!