நுரையீரலை சுத்தம் செய்ய - சுவாமி ராம் தேவ் கூறும் 'ஜப்பானிய கஷாயம்'
தூசு மாசுக்களால் நுரையீரலில் வரும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு சுவாமி ராம் தேவ் ஒரு கசாயத்தை பரிந்துரைக்கிறார்.
நுரையீரல்
மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் மிகவும் முக்கியமானதாகும். உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் உறுப்பு தான் நுரையீரல்.
வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வதும் நுரையீரல் பணிகளாகும்.

நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை- ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22,000 முறை மூச்சு விடுகிறான். கிட்டத்தட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறான்.
இந்த நுரையீரலில் குளிர்காலத்தில் சளி தொற்றுக்கள் ஏற்பட்டு பக்றீறியாக்கள் வளரும். இந்த தொற்றுக்களை நீக்கி நுரையீரலை ஆரோக்கியப்படுத்தும் 'இயற்கை ஜப்பானிய கஷாயம்' ஒன்று உள்ள. இதை பதிவில் பார்க்கலாம்.

'இயற்கை ஜப்பானிய கஷாயம்'
காலையில் டீ காபி குடிப்பதை விட்டு விட்டு நுரையீரலை கவனிக்க விருப்பானவர்கள் இந்த கசாயத்தை குடிக்கலாம். இது ஒரு 'இயற்கை ஜப்பானிய கஷாயம்', இதை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
மூன்று துண்டுகள் வெங்காயம், நான்கு துண்டுகள் ஆரஞ்சு, ஒரு துண்டு எலுமிச்சை, சிறிது நறுக்கிய இஞ்சி இப்போது பிரியாணி இலை மற்றும் இரண்டு இலவங்கப்பட்டை குச்சிகளைச் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் இந்த கஷாயம் குடிக்க நுரையீரல் வீக்கத்தை நீக்கி தொண்டைக்கு நிவாரணம் கொடுக்கும். இதை செய்தபின் மீண்டும் புகைபிடித்தல் பழக்கத்தை மேற்கொள்வது ஆபத்தை உண்டாக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |