சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி - கோடி லாபத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?
வரும் 22ஆம் தேதி, சூரிய பகவான் மிருகசிரிஷ நட்சத்திரத்திலிருந்து விலகி, திருவாதிர நட்சத்திரத்ஹ்டிற்கு பெயர்ச்சி பெறப்போகிறார்.

சூரியப்பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சிகள் மிக முக்கியம் பெறுகின்றது. அதில் சூரியப்பெயர்ச்சி இடம்பெறும் போது ஒவ்வொரு ராசிகளுக்கும் அவர்களது வாழ்க்கையில் நல்ல புதிய மாற்றங்கள் உண்டாகும் எனப்படுகின்றது.
தற்போது சூரியனின் நட்சத்திரப்பெயர்ச்சி இடம்பெறப்போகின்றது. இது 12 ராசிகளில் சில ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த குறிப்பிட்ட ராசிகள் அவர்களின் வாழ்க்கையில் பல நன்மைகள் நடக்குமாம்.
அந்த ராசிகள் யார் என்பதையும் அவர்களுக்கு கிடைக்கும் பொதுபலன்கள் பற்றியும் பார்க்கலாம்.

மிதுனம்
- சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இது சாதகமான காலமாக அமையும். பேச்சுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தனிப்பட்ட கவர்ச்சி உயரும். தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரக்கூடும். ராகுவின் தாக்கம் இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்தி, நிதானமாக பேசுவது நன்மை தரும்.
தனுசு
- சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் புதிய கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தடைபட்டிருந்த சுப காரியங்கள் கைகூடும். தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறலாம்.
கன்னி
- சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கும் பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கலாம். அரசு வேலை வாய்ப்புகள் அமையக்கூடும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
சிம்மம்
- சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் 11ஆம் வீடு (லாப ஸ்தானம்) பலம் பெறுகிறது. இதனால் தொழிலில் இருந்த தடைகள் நீங்கி நல்ல லாபம் கிடைக்கும். மொத்த வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத திடீர் பணவரவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).