கணவர் சூர்யாவுடன் நெருக்கமாக ஜோதிகா! மகள் வெளியிட்ட அசத்தலான காட்சி
நடிகர் சூர்யா, தற்போது தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
சூர்யா ஜோதிகா
சூர்யா மற்றும் ஜோதிகா 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.சமீபத்தில் சூர்யா,ஜோதிகா மகள் தியா 10 ஆம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண்களின் விவரம் சமூக வலைதளங்களில் வைரலானது.
முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் இவர் நடித்திருந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை இப்படம் வெற்றிப்படமாகவும் அமைந்த நிலையில், அடுத்ததாக பாலா இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி உள்ளார்.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை ஜூலை மாதம் கோவாவில் தொடங்க உள்ளனர். இதனால் தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார் சூர்யா.
காதல் மனைவியுடன் சுற்றுலா
மத்திய அமெரிக்காவில் உள்ள கோஸ்டாரிகாவிற்கு மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் சென்றுள்ளார் சூர்யா.
அங்குள்ள சுற்றுலா தளங்களை ஜோடியாக குடும்பத்துடன் சுற்றிப்பார்த்த சூர்யா, மனைவி மற்றும் மகளுடன் காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டதோடு, அங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளையும் விளையாடி உள்ளார்.
அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒன்றாக தொகுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜோதிகா. அந்த பதிவில் Pura vida என்கிற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார்.
Pura vida என்றால் ஸ்பேனிஷ் மொழியில் புனிதமான வாழ்க்கை என்று அர்த்தம். மேலும் தான் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை தனது மகள் தியா தான் எடிட் செய்ததாக ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவின் மகள் தியா தற்போது 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர் 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.