இன்று இருளில் மூழ்கும் பூமி... இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்... அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்
இன்று ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நடைபெறும் நிலையில், 12 ராசிகளில் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ இருக்கின்றது. இன்று அஸ்வின் அமாவாசை நாளில் நிகழும் இந்த கிரகமானது இரவு 8.34 மணி முதல் அதிகாலை 2.25 மணிக்கு முடிவடைகின்றது.
இந்த சூரிய கிரகணத்தில் ஜோதிட மற்றும் மத முக்கியத்துவம் மட்டுமின்றி அறிவியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த கிரகணத்தில் சுப மற்றும் அசுப பலன்களை பெறும் ராசிகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
மிதுனம்
மிதுன ராசிகாரர்களுக்கு இந்த சூர்ய கிரகணம் நன்மையை அளிக்கின்றது. சுப பலன்களை அடையும் இந்த ராசியினருக்கு அடுத்தடுத்து வெற்றியும், மன அமைதியும் இருக்கும். செல்வம் பெருகுவதுடன், அலுவலகத்தில் பணி உயர்வு மற்றும் பாராட்டும் கிடைக்கின்றது.
சிம்மம்
சூரிய கிரகணத்தின் போது சூரியன் கன்னி ராசிக்கு மாறியுள்ள நிலையில், சிம்ம ராசிக்கு நன்மை ஏற்படும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த வேலை தற்போது முடிவடைவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படுவதுடன், பொருளாதார நிலை சிறப்பாக அமையும்.
துலாம்
துலாம் ராசிக்கு இந்த சூரிய கிரகணம் மகிழ்ச்சியை தருவதுடன், சாதகமாகவும் இருக்கும். மாரியாதை, நம்பிக்கை, மற்றும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியும் வந்து சேரும். தொழிலிலும் வெற்றி ஏற்படுவதுடன், அதிஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த சூரிய கிரகணத்தில் மனம் அமைதியற்றதாக இருக்கலாம். ஆதரவு மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் ஏற்படுவதுடன், கடின உழைப்பிற்கு பலனும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது முக்கியமாகும்.
மகரம்
மகர ராசியினருக்கு இந்த சூரிய கிரகணத்தின் போது நம்பிக்கை அதிகரிப்பதுடன், இந்த காலத்தில் செலவுகளும் அதிகரிக்கும். வீடு, வாகனம் சம்பந்தமான மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், அதிர்ஷ்டமும் அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |