அதி சக்திவாய்ந்த சூரிய கிரகணம்! 4 கிரக சேர்க்கை.. கிரகண நாளில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்
அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை பகல் 02.28 மணி முதல் மாலை 06.32 மணி வரை துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.
பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள்.
சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.
சூரிய கிரகண நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது.
அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
என்ன செய்யக்கூடாது?
- கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.
- தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது.
- எந்த வேலையும் செய்யக்கூடாது.
- கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும்.
- கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது.
- முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம்.
- அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும் என்கிறது சாஸ்திரம்.
கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்
கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.