இந்த ஆண்டின் கடைசி சூர்ய கிரகணம்: இந்த 6 ராசிக்காரங்களுக்கு பேரதிர்ஷ்டம் நிகழுமாம்
இந்த ஆண்டின் கடைசி சூர்யகிரகணம் டிசம்பம் மாதம் 4ம் திகதி நிகழவிருக்கின்றது. ஒரு பகுதி சூர்ய கிரகணமாக இருக்கும் இந்த கிரகணத்தில் சில ராசிகளுக்கு கெட்ட விளைவுகளும் ஏற்படடுவதும் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனே ஏற்படுகின்றது.
குறிப்பாக, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 6 ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய கிரகணம் மிகவும் அதிர்ஷ்டத்தினை கொடுக்க இருக்கின்றது.
2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4ம் தேதி காலை 10:59 மணிக்கு தொடங்கி மதியம் 03:07 மணிக்கு முடிவடைகின்றது. குறித்த கிரகணத்தினால் நன்மை ஏற்படும் ராசிகளை கீழே காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் இந்த கிரகத்தில் கௌவம், மரியாதை, மற்றும் பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம் உண்டாவதுடன், பணம் மற்றும் தொழில் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
பழைய சச்சரவுகளில் இருந்து விடுபடும் இந்த ராசிக்காரர்களுக்கு, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதுடன், இந்த சந்திர கிரகணத்தில் நல்ல செய்தியினை பெறலாம்.
சிம்மம்
சீறிவரும் சிம்ம ராசிகாரர்களுக்கு நல்ல பலனை அளிப்துடன், பிரச்சினைகள் அனைத்தும் விலகி தடைபட்ட பணிகள் சிறப்பாக தொடங்குமாம்.
கன்னி
கன்னி ராசிகாரர்களுக்கு சுப பலன் அள்ளி தரும் இந்த நேரத்தில் தைரியமும் ஏற்படுவதுடன் வேலையுடன் வெற்றியும் ஏற்படும்.
மகரம்
இந்த கிரகணத்தின் போது பல முன்னேற்றங்கள் ஏற்படும் மகர ராசிக்கு வருமானம் அதிகரித்து லாபகரமான சூழ்நிலை ஏற்படும்.
கும்பம்
சூரிய கிரகணம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுபமாக அமைவதுடன், திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம்.