பிறந்த நாளுக்கு யாரும் எதிர்ப்பாராத சர்ப்பைஸ் கொடுத்த ஜோதிகா! இன்ப அதிர்ச்சியில் நடிகர் சூர்யா... என்ன பரிசு தெரியுமா?
நடிகர் சூர்யாவின் 46 ஆவது பிறந்தநாள் 23 ஆம் திகதி ரசிகர்களாலும் குடும்பத்தினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில், அவரது காதல் மனைவி ஜோதிகா சூப்பர் சர்பிரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகர்கள் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்கள் அதனை ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டாட துவங்கி விடுவார்கள்.
அந்த வகையில் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் இரவு 12 மணிக்கு சூர்யா, அவரது வீட்டில் பிரமாண்ட கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
இதை தொடர்ந்து, சூர்யாவின் பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக... அவரது காதல் மனைவி ஜோதிகா 'எதற்கும் துணிந்தவன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் கணவருக்கு பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு, சர்பிரைஸ் விசிட் அடித்த ஜோதிகா, பின்னர் படக்குழுவினருடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தார். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.