சர்வைவரில் அதிரடி திருப்பம்.... மருத்துவ சிகிச்சை முடிந்து திரும்பிய முக்கிய போட்டியாளர்கள்
சர்வைவர் நிகழ்ச்சிக்கு மீண்டும் மருத்துவ சிகிச்சை முடிந்து விக்ராந்த், உமாபதி, வனேசா ஆகிய மூவரும் திரும்பியுள்ளனர்.
18 போட்டிளார்களில் 7 போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர்.
சிறப்பாக விளையாடிய நந்தா ஜூரியாகி விட்டார். மிகுதி 9 பேரில் எட்டு பேர் இண்டு அணியா பிரிந்து விளையாட வேண்டும். ஒருவர் அதிர்ஷ்டசாலி அவர் விளையாடாமல் இறுதி கேமுக்கு செல்வார்.

ஜெயிக்கிற அணி மட்டும்தான் அடுத்த இம்யூனிட்டி சேலன்ஜில் பங்கேற்க முடியும் என்று தொகுப்பாளர் அர்ஜூன் அறிவித்திருந்தார்.
அதிர்ஷ்டக்கல் மூலம் அணி பிரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு சரணுக்கு நீலக்கல் வந்ததால் அவர் ஆடத் தேவையில்லை.
ஆனால் வெற்றி பெறும் அணியுடன் இணைந்து கொள்ளலாம்.
விஜி, வனேசா, உமாபதி, இனிகோ ஆகியோர் ஓர் அணியாகவும் விக்ராந்த், அம்ஜத், ஐஸ்வர்யா, நாராயணன் ஆகியோர் ஓர் அணியாகவும் பிரிந்தார்கள்.

இதில் உமாபதி அணி வெற்றி பெற்றது. தோல்வியடைந்த அணியில் இருந்தும் ஒருவர் இம்யூனிட்டி சேலன்ஜில் கலந்து கொள்ள முடியும் என்று அறிவிப்பு வந்ததால் ஐஸ்வர்யாவும் தேர்வு செய்யப்பட்டு 6 போட்டியாளர்கள் அடுத்த போட்டிக்கு தயாராகியுள்ளனர்.
இந்த போட்டியின் முடிவில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படவுள்ளது. பார்க்கலாம் என்ன நடக்கும் என்பதை....