சர்வைவர் நிகழ்ச்சியில் கெத்து காட்டிய விஜியா இது? வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் விஜயலட்சுமி தனது வளைகாப்பு நிகழ்வின் போது, எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளராக களமிறங்கியவர் நடிகை விஜயலட்சுமி. இந்த நிகழ்வின் முடிவில் இவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு, 1 கோடி பரிசை தட்டிச் சென்றார்.
இவர் ஏற்கனவே, பிக்பாஸ் சீசன் 2 , Mr & Mrs சின்னத்திரை, டும் டும் டும் சீரியல், பிக்பாஸ் சீசன் 4ல் சிறப்பு விருந்தினர் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் களமிறங்கி கலக்கியுள்ளார்.
தமிழில், சென்னை 28 படத்தில் அறிமுகமாகி, இதுவரை 14 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது சீமந்த நிகழ்வில் எடுத்த போட்டோவை தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், சர்வைவர் ஷோவில் கெத்து காட்டிய நம்ம விஜயலட்சுமியா இப்படி அடக்கம் ஒடுக்கமாக நிக்குறாங்க என காமெடியாக கமெண்ட் செய்துள்ளனர்.