சர்வைவர் நிகழ்ச்சிக்கு அர்ஜுன் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? வெளியான ரகசியம்
தற்போது பெரும்பாலான ரிவிக்கள் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களின் வரவேற்பினை அதிகமாக பெற்று வருகின்றது.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கி ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகிவருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ராந்த், நடிகை சிருஷ்டி டாங்கே, பெசன்ட் ரவி, அம்ஜத் கான், விஜே பார்வதி, லட்சுமி பிரியா, சிங்கப்பூர் ராப் பாடகர் லேடி காஷ், காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா, நந்தா, விஜயலட்சுமி, இந்திரஜா சங்கர், சரண் சக்தி, நாராயணன் லக்கி, ராம் சி ஆகிய 16 போட்டியாளர்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதுமட்டுமின்றி இன்னும் 2 பேர் வைல்டு கார்டு எண்டியாகவும் களமிறங்க உள்ளார்களாம்.
90 நாட்கள் மிகவும் சிறப்பாக விளையாடி சிறந்த போராளி என்று வெற்றிபெரும் போட்டியாளருக்கு பரிசுத்தொகை ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களால் வாழ முடியும் என்பதை இரண்டாவது நாள் நிகழ்ச்சியிலேயே தெளிவாக காட்டியுள்ளது பிரபல ரிவி.
ஆம் நிகழ்ச்சியின் முதல்நாள் போட்டியாளர்கள் அறிமுகம் என போனது. அன்றே காடர்கள், வேடர்கள் என போட்டியாளர்கள் இரு அணியினராக பிரிக்கப்பட்டனர்.
இரண்டாவது நாள் முதலே போட்டிக்கான கடுமையான சவால்கள் துவங்கிவிட்டன. குறிப்பாக அவர்களுக்கான அடிப்படை தேவைக்கான சவால்கள் நடந்தன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சவால்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
கூடவே சண்டை, சச்சரவுகள் துவங்கி உள்ளன. போக போக போட்டிகள் கடுமையாக நடக்கும் என தெரிகிறது.
தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன், இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவதற்கான சம்பவம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சிக்காக மொத்தம் 5 கோடி ரூபாய் பெற்றுள்ளாராம். அத்துடன் ஆக்சன் கிங் அர்ஜுன் தயாரித்து, அவருடைய மகள் நடிக்கும் படங்களையும் ஜீ தமிழ் வாங்கலாம் என்ற தகவலும் வெளியே கசிந்துள்ளது.