சர்வைவர் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய போட்டியாளர்: சுருண்டு விழுந்து கிடந்த காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் சிருஷ்டி, இந்திரஜா இருவர் வெளியேறியுள்ளனர்.
குறித்த போட்டியாளர்கள் காடர்கள், வேடர்கள் என்று இரு அணிகளாக பிரிந்த நிலையில், இந்த வாரம் அதிகமாக வாயடித்து வந்த பார்வதி அவரது அணியிலிருந்து வெளியேறினார். தற்போது பார்வதி, முன்பே வெளியேறிய காயத்ரியுடன் தனி தீவில் வசித்து வருகின்றார்.
நேற்றைய தினத்தில் இரண்டு புதிய போட்டியாளர்கள் உள்ளே எண்ட்ரியானார்கள். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியில் நடைபெற்ற immunity challenge-இரண்டு அணிகளும் போட்டியிட இதில் காடர்கள் டீமில் இருந்த ராம் விபத்தில் சிக்கியுள்ளார்.