திகிலான போட்டியில் கிடைத்த வெற்றி: சர்வைவர் அனுப்பிய சர்ப்ரைஸான பரிசு
பிக்பாஸ் நிகழ்ச்சியினை மிஞ்சும் அளவிற்கு பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியின் டாஸ்க் மக்கள் அனைவருக்கும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகின்றது.
பிக்பாஸ் வீட்டிற்கு அத்தியாவசிய உணவு மற்றும் தங்கும் இடம் என கொடுக்கப்பட்ட நிலையில், குறித்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர் தங்களின் உணவினை தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும். காட்டிற்குள் அவர்கள் கட்டியிருக்கும் டென்ட்டில் தான் தங்க வேண்டும்.
இவ்வாறு பல சவால்களை எதிர்கொள்ளும் சர்வைவர் நிகழ்ச்சியில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் வெற்றி பெற்ற அணிக்கு விருந்து ஆயத்தமாகியுள்ளது. இதனை போட்டியாளர்கள் எவ்வாறு மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டாடியுள்ளனர் என்பதை ப்ரொமோவாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.