சுற்றி எரியும் நெருப்பிற்கு நடுவே அரங்கேறும் போட்டி: சர்வைவர் புதிய ப்ரொமோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியினை அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
எலிமினேட் ஆன இந்திரஜா மற்றும் சிருஷ்டி வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் மற்ற 14 போட்டியாளர்களை வைத்து பயங்கரமான டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் வேடர்கள் டீம் வெற்றி பெற்று வாழ் ஒன்றினை வாங்கிக்கொண்டதால், காடர்கள் டீம் ட்ரைபல் பஞ்சாயத்திற்கு காடர்கள் டீம் வரவழைக்கப்பட்டு வாக்கு அடிப்படையில் ஒருவரை வெளியேற்ற அர்ஜுன் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியான ப்ரொமோவில் வெளியேற்றத்திற்கு முதலாக போட்டி ஒன்றினை சிருஷ்டி, மற்றும் காயத்ரி சுற்றி எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கு மத்தியில் டாஸ்க்கினை செய்து வருகின்றனர்.
குறித்த ப்ரொமோவை அவதானிக்கும் பொழுது வேறொரு இடத்தில் தங்கவைக்கப்பட்ட சிருஷ்டி, இந்திரஜா மீண்டும் அவர்கள் டீமிற்குள் வந்துவிட்டார்கள் என்று தெரிகின்றது.