சர்வைவர் நிகழ்ச்சிக்குள் திடீரென்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிஜ வேடர்கள்... தமிழ் கற்றுக் கொண்ட அதிசயம்!
பல வெளிநாட்டு ரியாலிட்டி ஷோக்கள் தமிழில் உருவாக்கப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
பிக் பாஸ், மாஸ்டர் செஃப் ஷோக்களை தொடர்ந்து சர்வைவர் நிகழ்ச்சியும் தற்போது தமிழில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளது.
தினமும் நட்சத்திரங்களின் நிஜ முகங்களை பார்க்கும் ரசிகர்கள் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் நுணுக்கமாக நோட் பண்ணி பாராட்டியும் கலாய்த்தும் வருகின்றனர்.
ஆள் பலத்தையும் அறிவு பலத்தையும் பயன்படுத்தி விளையாட வேண்டிய சர்வைவர் ஷோவில் சண்டை சில சண்டை சச்சரவுகளும் தோண்றி மறைகின்றது. இந்த வாரம் எப்படியாவது பார்வதியை எலிமினேட் செய்து விடுங்க என ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் பறக்கின்றன.
அது ஒரு புறம் இருக்க... இன்றைய தினம் திடீரென்று தீவுக்குள் வேடர்கள் என்றி கொடுத்து நிகழ்ச்சியை பரபரப்பாக்கினார்கள். போட்டியார்களுக்கு வேட்டையாடுவதற்காக அம்பு விடுதல், ஈட்டி எறிதல் போன்ற பயிற்சிகளை கொடுத்தனர்.
வேடர்களிடம் இருந்து கற்று கொண்டது மட்டும் இன்றி... வேடர் டீமில் ரவி அவர்களுக்கு தமிழ் கற்று கொடுத்தார். நன்றி வணக்கம் போன்ற வார்த்தைகளை வேடர்கள் கற்று கொண்டனர். பின்னர் சற்று வித்தியாசமாக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் டாஸ்க் வழங்கப்படுகின்றது.
அந்த டாஸ்க்கில் இரண்டு அணியுமே மிக சிறப்பாக அவர்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள்.