சர்வைவரில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய ஐஸ்வர்யா! பேரதிர்ச்சியில் பார்வையாளர்கள்
சர்வைவர் போட்டியில் இருந்து இன்று கண்ணீருடன் ஐஸ்வர்யா வெளியேற்றப்பட்டுள்ளார்.
இது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பஞ்சாயத்தில் அனைவரும் தொகுப்பாளர் அர்ஜூனை சந்தித்தனர். இதன் போது எலிமினேசனுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதற்கு முன்பு கொம்பர் அணியின் தலைவராக இருக்கும் விக்ராந்துக்கு கொடுக்கப்பட்ட பவர் மூலம் ஐஸ்வர்யாவின் ஓட்டினை பிளக் செய்தார்.
பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐஸ்வர்யாவுக்கு 4 ஓட்டுகளும் சரணுக்கு 4 ஓட்டுகளும் கிடைக்க பெற்று இருவரும் சமநிலையில் இருந்தனர்.
அதனால் மீண்டும் இவர்கள் இருவருக்கும் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ஐஸ்வர்யாவுக்கு 6 ஓட்டுகள் கிடைக்க பெற்றதால் அவர் எலிமினேட் செய்யப்பட்டு மூன்றாம் உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.

இது பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. புதிய புதிய திருப்பங்களுடன் சர்வைவர் நிகழ்ச்சி விறு விறுப்பாக போய் கொண்டிருக்கும் தருணத்தில் ஐஸ்வர்யாவின் எலிமினேசன் அனைவருக்கும் பேரதிர்ச்சியே.
