சர்வைவர் நிகழ்ச்சியிலும் இப்படியொரு காதல் ஜோடியா? முதல்நாள்ல இருந்தே ரொமான்ஸாம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் அங்கு காதல் ஜோடி இருக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது பல ரிவிகள் ரியாலிட்டி ஷோ நடத்திவரும் நிலையில், பிக்பாஸிற்கு நிகராக சர்வைவர் நிகழ்ச்சியும் சென்று கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் வீட்டில் அடிப்படை தேவைகளுக்கு கஷ்டப்படாமல் உள்ளே இருந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
ஆனால் சர்வைவர் நிகழ்ச்சியில் தனது அடிப்படை தேவைக்கு கூட இவர்கள் போராடி தான் நாட்களை கழித்து வருகின்றனர். மேலும் எந்தவொரு மேக்கப்போ, சூடான உணவோ, பாதுகாப்பான தங்கும் இடமோ இல்லாமல் இருந்து வருகின்றனர்.
இதில் தற்போது நந்தா, ஐஸ்வர்யா, சரண் மூன்று பேரும் மூன்றாம் தீவில் இருக்கின்றனர். தற்போது ஐஸ்வர்யாவின் செயல்கள் ரசிகர்களை அதிகமாக ரசிக்கும்படியாக இருக்கின்றது.
நந்தா, சரண்ணிடம் பெண் போட்டியாளரை சைட் அடித்திருக்கீங்களா என்று ஐஸ்வர்யா கேள்வி எழுப்ப இதில் சரண் ஐஸ்வர்யாவை சைட் அடித்ததும், அதனை ஐஸ்வர்யாவும் அவதானித்ததும் உண்மை அவிழ்ந்துள்ளது.
இதனை அவதானித்த ரசிகர்கள் இங்கும் காதல் ட்ராக் ஓட ஆரம்பித்துவிட்டதாக என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.