பரபரப்பு.... ஆபத்தில் அடுத்தடுத்து வெளியேறிய 4 போட்டியாளர்கள்! லேடிகேஸிற்கு என்ன நடந்தது?
சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சர்வைவர் என்பது உடல்வலிமை சார்ந்த போட்டி மட்டும் அல்ல.
புத்திக்கூர்மை சார்ந்த ஆட்டமும் இதில் உண்டு. கடந்த சில நாட்களாக அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது.
நேற்று முன்தினம் இம்யூனிட்டி சவாலில் வனேசா வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று நடந்த பஞ்சாயத்தில் 4 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இல்லை. அவர்களில் விக்ராந்த், உமாபதி, லேடிகாஷ், வனேசா ஆகியோருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.
அது மட்டும் இல்லை... முழுமையாக குணமடைந்த பிறகு நிகழ்ச்சியில் விக்ராந்த், உமாபதி, வனேசா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

எதிர்ப்பாராத விதமாக லேடிகாஷ் இனி எப்போதுமே நிகழ்ச்சியில் தொடர மாற்றார் என்று அறிவித்து அர்ஜூன் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதற்கு என்ன காரணம் என்று தெரிய வில்லை.

மேலும், லேடிகாஷை தவிர மற்ற மூன்று போட்டியாளர்களும் மருத்துவ சிகிச்சை பெறுவதாக அவர்களே வீடியோ ஒன்றின் வாயிலாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் லேடிகாஷ் ஏன் வெளியேற்றப்பட்டார் என்று தெரியவல்லை. அதுவும் இல்லாமல் அவர் அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அண்மையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வீடியோ வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
