போட்டியில் நடந்த துரோகம்... அடுத்தடுத்து வெளியேற்றப்பட்ட சிறந்த போட்டியாளர்கள்!
சர்வைவர் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரமாக ஏற்பட்ட அதிரடி திருப்பங்கள் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சர்வைவர் நிகழ்ச்சியில் காடர் மற்றும் வேடர் என்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் திபாவளிக்கு முதல் எபிசோட்டில் இருந்து அனைவரும் கொம்பர்களாக மாறினார்கள்.
என்னதான் அவர்கள் கொம்பர்களாக பெயர் மாற்றம் அடைந்திருந்தாலும் காடர்கள் , வேடர்கள் என்ற பிரிவை வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஆனால் காடர்கள் கையாளும் அரசியல் மிக மோசமானதாக இருக்கிறது.

பெரும்பான்மை என்னும் பலத்தை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்டம், விளையாட்டு தர்மத்திற்கே எதிரானது.
தாங்கள் பலவீனமான போட்டியாளர்கள் என்று தெரிந்தும் லேடிகாஷூம் வனேசாவும் காடர்களிடம் ஒட்டுண்ணிகளாக இருப்பது மனச்சாட்சியே இல்லாத விஷயம்.

வாக்களிப்பு என்கிற காரணத்திற்காகத்தான் தாங்கள் பாதுகாக்கப்படுகிறோம் என்பது தெரிந்தும் அவர்களும் நீடித்து கொண்டிருக்கின்றனர்.
‘பலமான போட்டியாளர்களை முதலில் வெளியே அனுப்புவது’ ஒரு சிறந்த தந்திரம்தான்.
ஆனால் அது ஆரோக்கியமான விளையாட்டிற்கு செய்யப்படும் துரோகம். இவர்களின் விளையாட்டு அரசியல் விவகாரத்தில் அர்ஜூன் தலையிட வேண்டும் என்று பார்வையாளர்கள் கருகின்றனர்.

ஏன் என்றால் ஐஸ்வர்யா மற்றும் நந்தா போன்ற சிறந்த போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட விதம் பார்வையாளர்களுக்கு சர்வைவர் நிகழ்ச்சியின் மீதே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரைபல் பஞ்சாயத்தின் வாக்கெடுப்பில் அடுத்து காடர்களால் பலியாகப் போகிறவர் யார்? காடர்களின் இந்த எண்ணிக்கை அரசியலுக்கு யார் முற்றுப்புள்ளி வைக்க போகின்றார்கள் என்பதை பார்க்கலாம்.