சர்வைவர் நிகழ்ச்சி ஸ்கிரிப்டா? பல ஆதாரங்களை வெளியிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக அறிமுகமாகிறார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
குறித்த ஷோ ஆரம்பித்த சில நாட்களிலேயே சில சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறது. பொதுவாக சில ரியாலிட்டி நிகழ்ச்சி ஆரம்பித்தாலே அதில் நடக்கும் விஷயங்கள் ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு ஸ்கிரிப்ட் தான் என்ற விமர்சனங்கள் விழுந்துவிடும், அதுதான் தற்போது இந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பட்டுள்ளது.
நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெசன்ட் ரவி மற்றும் அம்ஜத் இருவரும் உணவு தேடி தீவை சுற்றிப் பார்க்கும்போது அங்கே ஒரு கிழங்கு செடி இருப்பதை கண்டுபிடிக்கின்றனர்.
ஒரு அம்ஜத் அந்த செடியை பார்த்த அடுத்த கணமே அண்ணே அது ஏதோ கிழங்கு செடி மாதிரி இருக்கு அண்ணே என்று சொன்னதும் உடனே பெசன்ட் ரவியும் ஆமா ஆமா இது ஆள வள்ளி கிழங்கு போல இருக்கிறது எதுக்கும் கிட்ட போய் இலையை பார்ப்போம் என்று சொல்லிவிட்டு பின்னர் அந்த செடிக்கு அருகில் செல்கின்றனர்.
பொதுவாக கிழங்கு செடிகள் மண்ணுக்கு அடியில் மிகவும் இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும். ஆகையால் அதனை அவ்வளவு எளிதாக எடுத்து விட முடியாது. ஆனால், பெசன்ட் ரவியோ விட மிகவும் எளிதாக பிடுங்கி விட்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதை ஏற்கனவே யாரோ நட்டு வைத்தது போல இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
ஆனால், அதை ஏதோ எதேச்சையாக கண்டுபிடித்தது போல காண்பித்தனர் அதேபோல அந்த தீவில் இருக்கும் வாழை மரங்கள் தென்னை மரங்கள் அனைத்தும் சீரான இடைவெளியோடு இருக்கின்றது.
மரங்கள் தீவிலோ காட்டிலோ வளரும் மரங்கள் இப்படி சீரான இடைவெளிகளில் வளராது இதுபோன்ற பல்வேறு நம்பகமற்ற விஷயங்கள் இருப்பதால் பிக்பாஸில் போல இந்த நிகழ்ச்சியும் ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சிதான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Kaatukula kezhangu
— chettyrajubhai (@chettyrajubhai) September 16, 2021
Nambi thaan aganum pangu#Survivor #SurvivorOnZeeTamil pic.twitter.com/2I6GyYRoPz