நயனின் குழந்தைகளுக்கு வாடகைத்தாய் இவர் தானா? வைரலாகும் பதிவு
பிரபல நடிகை நயன்தாராவுக்கு குழந்தைப் பெற்றுக் கொடுத்த வாடகை தாயின் புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலையத்தளங்களில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமணம் முடிந்து ஐந்து மாதங்களே ஆன நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ்சிவன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்ததாலும் இவர்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பாரியளவில் பேசப்பட்டது.
இதன்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் சில ஆதாரங்களை அதிகாரிகளிடம் சமர்பித்திருந்தனர்.
வாடகை தாய்
ஆனால் இது வரைக்கும் வாடகைதாய் பற்றிய எந்தவிதமான தகவல்களும் வெளியாகாத நிலையில், தற்போது வாடகை தாயின் புகைப்படம் என நயன்-விக்கியின் அருகே நிற்கும் பெண்ணின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இது உண்மையா? பொய்யா? என நயன்- விக்கி விளக்கம் அளித்தால் மட்டும் உண்மைகள் தெரியவரும்.
புகைப்படத்தில் நயன்-விக்கியோடு இருக்கும் இப்பெண்தான் அவர்களின் குழந்தையைப் பெற்றெடுத்த வாடகைத் தாயாமே.இவர் நயனின் நெருங்கிய சிநேகிதியாம். pic.twitter.com/mlQRymqOY6
— சினிமாக்குத்தூசி (@mayirepochu1) October 22, 2022