தளபதியின் உருவச்சிலையை சர்ப்ரைஸ் கிப்ட்டாக கொடுத்து மகளை அழவைத்த அர்ச்சனா!
வி.ஜே. அரச்சனா தனது மகளுக்கு தளபதியின் உருவச்சிலையை சர்ப்ரைஸ் கிப்ட்டாக கொடுத்து அழவைத்திருக்கும் வீடீயோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வி.ஜே. அரச்சனா
தொலைக்காட்சிகளில் 23 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார் வி.ஜே. அர்ச்சனா. இவர் முதன்முதலாக தொலைக்காட்சியொன்றில் ஆங்கில செய்தியாளராகதனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
பிறகு இளமை புதுமை, காமெடி டைம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இந்நிலையில் 2004ஆம் ஆண்டு வினித் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் சாரா என்ற பெண்குழந்தையும் இருக்கின்றார். மகள் சாரா வளர்ந்ததும் இவர்கள் இருவரும் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள்.
பின்னர் இவர்கள் யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்தார்கள். பின்னர் படங்களில் நடிக்கும் அளவிற்கும் வளர்ந்து விட்டார்கள். இந்நிலையில் அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு குறைவான வாக்குகளைப்பெற்று வெளியேறியிருந்தார்.
இவர்களுக்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துக் கொண்டே தான் இருந்தது. அண்மையில் கூட தனது கணவருடனான விவாகரத்து குறித்தும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
சர்ப்ரைஸ் கிப்ட்
இவ்வாறான நிலையில் அர்ச்சனாவின் மகளுக்கு தளபதி விஜய்யை மிகவும் பிடிக்கும் என்பதால் அவருக்காக விஜய்யின் உருவச்சிலையை பரிசளித்திருக்கிறார்.
அந்த சிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் எடுத்த மிகவும் வைரலாக புகைப்படத்தை பரிசாக கொடுத்திருக்கிறார்.
மேலும், சாரா அந்தச் சிலையைப் பார்த்து அழுது சந்தோசப்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Thalapathy @actorvijay Fan girl Zara Cute Moment ?❤️ #Varisu #LEO #BloodySweet pic.twitter.com/xljkC0t4w7
— Jahir Hussain ???????????????47? (@Jahir2441) March 15, 2023