காதலனை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ்... கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அந்தோணி தட்டிலுக்கும் நேற்றைய தினம் டிசம்பர் 12, 2024 அன்று கோவாவில் பாரம்பரிய முறையில் திருமணம் நடந்து முடிந்தது.
கீர்த்தி சுரேஷ்
தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி அதை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது.
அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகின்றார்.
கீர்த்தி ஹிந்தியில் அறிமுகம் ஆகும் பேபி ஜான் திரைப்பம் அட்லி தயாரிப்பில் இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவானுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 25 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில் நேற்று இவர்களின் திருமணம் இருவீ்ட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
இந்நிலையில் கீர்த்தியின் கணவர் அந்தோணி தட்டில் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி, கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு ரூ. 41 கோடி என்றும் அவருடைய கணவர் ஆண்டனிக்கு ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரையில் தான் சொத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |