வெளிநாட்டு மாப்பிளைக்கு கிடைத்த அதிர்ச்சி.. கைபேசியால் வந்த வினை! இணையத்தை உலுக்கிய கோர சம்பவம்
வெளிநாட்டிலிருக்கும் கணவருடன் தொலைபேசியில் சண்டையிட்டு விட்டு பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண வாழ்க்கை
இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் சேர்ந்த பானுமதி என்பவருக்கும் குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
கட்டடத்தொழிலாளியான அய்யனார் திருமணம் முடிந்து சிறிது காலத்திற்கு பின்னர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் தொலைபேசியில் தான் உரையாடிக் கொள்வார்கள்.
சம்பவத் தினத்தன்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த குறித்த பெண் வீட்லுள்ள அறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.
தற்கொலை தொடர்பான உண்மைகள்
இந்த விடயம் தொடர்பில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை தொடர்நது குறித்த பெண்ணின் பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சடலத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸார் இவரின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறிய பின்னர் அமைதி நிலைக்கு திரும்பியுள்ளனர்.
இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும் சந்தேகித்துள்ளனர்.