ஏழரை சனியை ஓட ஓட விரட்டும் சூரியனார் கோயில்! எங்கு உள்ளது தெரியுமா?
பொதுவாக இந்தியாவிலிருக்கும் கோவில்களில் சூரியனார் கோயில் எனும் கோவில் பெயர் பெற்ற கோவிலாக பார்க்கப்படுகிறது.
கோவிலின் அமைவிடம்
இந்த கோவில் இந்தியாவில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகாடையில் அமைந்துள்ளது. மேலும் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் பிரசித்திப் பெற்ற சூரியனார் கோவில் அமைந்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்திய மக்களால் அதிகம் தேடப்படும் கோவில்களில் இது முக்கிய இடத்தை பிடிக்கிறது. மேலும் இந்த கோவில் குலோத்துங்கச்சோழரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்றும், (கி.பி 1060 தொடக்கம் 1118 வரையிலாக காலப்பகுதி) இந்த தகவல்கள் கோவில்களில் இருக்கும் கல்வெட்டியிலிருந்து உறுதிச் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து சூரியனார் கோவிலில் நான்கு பிரகாரங்களுடன் கூடிய சுற்று சுவருடன் நடுவே ராஜகோபுரத்துடன் இருக்கிறது.
சிறப்புக்கள்
மேலும் இந்த கோவிலில் இருக்கும் கடவுள்களில் சூரிய பகவான் சிறப்பு பெறுகிறார். இவர் தன்னுடைய இருகரங்களிலும் தாமரை மலர்கள் ஏந்தியப்படி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவரின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் அதன் வீச்சை யாராவும் தங்க முடியாது. இதனால் இவரிடம் வேண்டுதல்கள் வைப்போர் சரியான நேரத்திற்கு செய்து முடிப்பார்கள்.
இந்த கோவிலில் இருக்கும் சிறப்புக்களில் சூரிய பகவான் தன்னுடைய இரு மனைவிகளுடன் திருமண கோலத்தில் நிற்பது முக்கியம் பெறுகிறது.
இந்நிலையில் சனிதோஷங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் பக்தர்கள் திருவிழாவின் போது பூஜை வழிபாடுகள் செய்து அதனை இல்லாமல் செய்துக் கொள்கிறார்கள். உதாரணமாக (ஜென்ம சனி, ஏழரை சனி)
இதனால் சூரியனார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சூரியனார் கோவில் தொடர்பில் இன்னும் பல விடயங்களை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.