12 ராசிக்காரர்களுக்கும் தீராத பணகஷ்டத்தையும் தீர்க்கும் லக்ன பரிகாரம்; எப்படி செய்ய வேண்டும்?
கடன் பிரச்சினை அனைவருக்கும் இருக்கும் ஏன் கோடீஸ்வரனாக இருந்தாலும், அவர்களுக்கும் தங்களுடைய தகுதிக்கு ஏற்ப கடன்கள் நிச்சயமாக இருக்கும். இதை யாராலும் மாற்றவே முடியாது. ஆனால் ஒவ்வொரு லக்னக்காரர்களுக்கும் குறிப்பிட்ட சில பரிகாரங்களை செய்யும் பொழுது அந்த லக்னத்திற்கு உரிய கடன் முற்றிலும் தீர்வதாக ஐதீகம் உள்ளது. அப்படி 12 லக்னக்காரர்களுக்கும் உரிய பரிகாரங்கள் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
மேஷம் மேஷ லக்னக்காரர்களுக்கு அதிபதி செவ்வாய் ஆவார். கடன் ஸ்தானமாக இருக்கும் ஆறாம் இடத்திற்கு அதிபதி புதன். ஆக புத பகவான் இருக்கும் ராசிகளை பொறுத்தே உங்களுக்கு கடன் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால், மேஷ லக்னக்காரர்கள் பொறுத்தவரை மிகப் பெரிய அளவில் கடனால் பாதிப்பு ஏற்பட சுய ஜாதகத்தில் பிரச்சனைகள் இருக்க வேண்டும். இவர்கள் முருகருக்கு செவ்வாய் கிழமையில் நெய் தீபம் ஏற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வது, சகல கடன் தொல்லைகளையும் தீர்க்கும்.
ரிஷபம் ரிஷப லக்னக்காரர்களுக்கு சுக்கிரனோடு குரு சேரும் பொழுது கடன் தொல்லைகள் தீரவே தீராது. இவர்கள் நீங்கள் மகாலட்சுமிக்கு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி, வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி அஷ்டோத்திரம் உச்சரித்து வர கடன்கள் மாயமாய் மறையும். மிதுனம் மிதுன லக்னக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து செவ்வாய் பகவான் மகரம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது கடன் பிரச்சினைகள் ஏற்படும்.
இதனால், நீங்கள் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் அர்ச்சனை செய்து, செந்தூர காப்பு சாற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லையும் எளிதில் தீரும். கடகம் கடக லக்னக்காரர்களுக்கு குருபகவான் மிதுனம், கடகம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது உங்களுக்கு கடன் தொல்லைகள் வலுவாகும். கடன் தொல்லைகள் தீர திருப்பதி சென்று வரலாம். அல்லது ஆறு வாரம் வரை திங்கட் கிழமைகளில் வீட்டில் விரதமிருந்து ஏழுமலையானை வழிபடலாம்.
சிம்மம் சிம்ம லக்னக்காரர்களுக்கு சனி பகவான் ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது உங்களுக்கு கடன் தொல்லைகள் மேலோங்கி காணப்படும். நீங்கள் சிவபெருமானை ஞாயிற்றுக்கிழமையில் வழிபடுவது சிறப்பான பலனை கொடுக்கும். மேலும் சூரியனார் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். கன்னி கன்னி லக்னக்காரர்களுக்கு கடன் ஸ்தானமாக இருக்கும் ஆறாம் ஸ்தானத்தின் அதிபதி சனி பகவான் ஆவார்.
ஆகவே சனிபகவான் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது உங்களுக்கு கடன் தொல்லைகள் ஏற்படும். நீங்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி, சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும். இவ்வாறு செய்ய கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லையும் தீரும்.
துலாம் துலாம் லக்னக்காரர்களுக்கு ஆறாம் இடத்தின் அதிபதியாக இருப்பவர் குரு பகவான். இவர் மேஷம், கடகம், தனுசு, மீன ராசியில் இருக்கும் பொழுது உங்களுக்கு கடன் தொல்லைகள் ஏற்படும். ஆகவே நீங்கள் வியாழன் கிழமையில் குரு பகவான் சன்னிதிக்குச் சென்று அவருக்கு உகந்த மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வர, எல்லா கடனும் விருச்சிகம் விருச்சிக லக்னக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் மிதுனம், கன்னி மற்றும் மகர ராசியில் இருக்கும் பொழுது கடன் பிரச்சனைகளை சுமக்க கூடும்.
இந்நேரத்தில் நீங்கள் 45 நாட்களுக்கு தொடர்ந்து வீட்டில் முருகப்பெருமான் படம் வைத்து தீபமேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்.
தனுசு தனுசு லக்னக்காரர்களுக்கு சுக்கிர பகவான் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பீர்கள். நீங்கள் பெருமாள் கோவிலில் இருக்கும் சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்து, வெள்ளிக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வர, தீராத கடனும், நோயும் தீரும். மகரம் மகர லக்னக்காரர்களுக்கு புதன் பகவான் மிதுனம், கன்னி, விருச்சிக ராசியில் இருக்கும் பொழுது கடன் தொல்லைகளை ஏற்கலாம். மேலும், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கடன் உங்களைத் தேடி வந்து சேரும்.
நீங்கள் புதன்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அனைத்து கடன்களும் நீங்கும். கும்பம் கும்ப லக்னக்காரர்கள் சனியின் ஆதிக்கம் கொண்டவர்கள். கடன் ஸ்தானமான ஆறாவது இடத்தின் அதிபதி சந்திரன் ஆவார். சந்திரன் கடகம், சிம்மம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது உங்களுக்கு கடன் தொல்லைகள் ஏற்படக்கூடும். இதனால், நீங்கள் பிரதோஷ காலங்களில் சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.
தொடர்ந்து ஆறு பிரதோஷங்கள் வழிபட்டால் தீராத, கடனும் நோயும் தீரும்.
மீனம்
மீன லக்னக்காரர்கள் குருவின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆறாம் இடத்தின் அதிபதியாக இருப்பவர் சூரியன். சூரியன் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் இருக்கும் பொழுது உங்களுக்கு கடன் தொல்லைகள் தீராத பிரச்சினையை உண்டாக்கும்.
அப்போது நீங்கள் சூரிய பகவானுக்கு செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை செய்து, காலை வேளையில் ஞாயிறு அன்று தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும்.....