ஏப்ரல் மாதத்தில் நிகழும் சூரிய பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசிகள் யார் யார்?
சூரிய பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தினை சந்திக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதிக செல்வத்தையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் அடைய உதவும் சூரியன் தற்போது பெயர்ச்சி அடைகின்றார்.
ஆம் வரும் ஏப்ரல் 14ம் தேதி மேஷ ராசிக்குள் சூரியன் பெயர்ச்சியடைவதால் இதன் தாக்கம் அனைத்து ராசியிலும காணப்படும். ஆனாலும் 4 ராசியினர் மட்டும் அதிர்ஷ்டத்தினை பெறுகின்றனர். எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்த கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியில் சூரிய பெயர்ச்சி நிகழ்வதால், இந்த காலகட்டமானது மிகவும் சிறந்ததாகவே இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைப்பதுடன், ஆரோக்கியத்திலும் முன்னேற்றம், பண பிரச்சனையும் தீருமாம்.

துலாம்
துலாம் ராசியினர் இந்த சூரிய பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தினை பெறுகின்றனர். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதுடன், காதலிப்பவர்களுக்கு வீட்டில் சம்மதம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது நல்ல பலனை அளிப்பதுடன், தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு லாபம் கிடைக்கும். பண ரீதியான பிரச்சனைகள் நீங்குவதுடன், இந்த காலக்கட்டத்தில் அனைத்து கடனையும் அடைத்து, மன நிம்மதியும் பெறுவீர்கள். குடும்ப உறவுகளும் வலுப்பெறுமாம்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த சூரிய பெயர்ச்சியினால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், வெளியே வராமல் தாமதப்பட்ட பணங்கள் அனைத்தும் வந்து சேரும். தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், எடுக்கும் காரியம் அனைத்திலும் வெற்றியும் கிடைக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |