68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய நடிகர்... யார் இந்த தேசிய விருது பெற்ற நடிகர்னு தெரியுமா?
தேசிய விருது பெற்ற நடிகர் ஒருவர் தனது 68 வயதில் 7ம் வகுப்பு தேர்வு எழுதியதுடன், அடுத்தடுத்து படிப்பதற்கும் தயாராக இருக்கின்றார்.
நடிகர் இந்திரன்ஸ்
கல்வி கற்றுக்கொள்ள வயது ஒன்றும் தடையல்ல என்று கூறுவதை நடிகர் ஒருவர் நிரூபித்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மலையாள திரையுலகில் 1981ம் ஆண்டில் தனது நடிப்பினை தொடங்கியவர் தான் நடிகர் இந்திரன்ஸ். சின்ன சின்ன கதாபாத்திரம், துணை நடிகர் எனவும் காமெடி கதாபாத்திரம் என்றும் நடிப்பில் அசத்தியுள்ளார்.
இவரது நடிப்பு பிடித்துப்போன இயக்குனர்கள் புதுமையான கதாபாத்திரத்தையும் இவருக்கு கொடுத்துள்ளனர். மலையாள திரையுலகில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஹோம் திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.

சிறு வயதில் வறுமை
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மே மாதம் திரைக்கு வரம் கருப்பு படத்தில் நடித்துள்ளார். தமிழில் இது அவரது முதல் படமாகும்.
சிறுவயதில் வறுமை காரணமாக பள்ளி படிப்பினை படிக்காமல் போயுள்ளார். ஆனால் எப்பொழுதும் முதல் ரேங்க் எடுக்கும் இவரால் புத்தகங்கள், சீருடை வாங்குவதற்கு பணம் இல்லாமல் இருந்ததால் நான்காம் வகுப்புடன் பள்ளியிலிருந்து நின்றுள்ளார்.

வீட்டில் 7 பிள்ளைகள் இருக்கும் நிலையில், குறித்த நடிகர் 3வது பிள்ளையாக இருந்துள்ளார். பள்ளிப்படிப்பினை நிறுத்திய ஏக்கத்தினை சரிசெய்ய 2024ம் ஆண்டு அதாவது தனது 68வது வயதில் 7ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
அடுத்தடுத்து படிப்பதற்கு தயாராக இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருப்பதாகவும் கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |