40 வயதில் மகள் மூலம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தீபிகா படுகோண்! வைரலாகும் பதிவு
பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினர், தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளனர்.
இவர்களது முதல் மகள் துவா (Dua), கர்ப்ப பரிசோதனை கருவியை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, குறித்த அறிவிப்பை வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

தீபிகா படுகோண்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா தீபிகா படுகோண் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சுமாராக 6 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினருக்கு, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தீபிகா படுகோண் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். தீபிகாவும் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் சேர்ந்து இந்த மகிழ்ச்சி செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |