விஜய்–அஜித் சாதனையை முறியடித்த சூர்யா–ஜோதிகா! வெறும் 17 மணிநேரத்தில் 5.75 கோடி பார்வைகள்
சூர்யா -ஜோதிகா தங்களது 20-ஆவது திருமண நாளை கொண்டாடிய தருணங்களைப் பதிவு செய்த காணொளி, சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. காணொளி வெளியான 17 மணிநேரங்களிலேயே 57.5 மில்லியன் பார்வைகளையும், 4.2 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது.
திருமண வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்லை கொண்டாடும் இந்த காணொளி, ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.

5.75 கோடி பார்வைகள்
இதனிடையே, சமீபத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் லண்டனில் சந்தித்துக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது. இரு முன்னணி நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்ட அந்த அரிய தருணத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால், அந்தக் காணொளியும் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில், விஜய்–அஜித் சந்திப்பு காணொளி பெற்றிருந்த பார்வை எண்ணிக்கையை, சூர்யா–ஜோதிகாவின் 20-ஆவது திருமண நாள் காணொளி வெளியான குறுகிய காலத்திலேயே முறியடித்துள்ளது.

விஜய்–அஜித் சந்திப்பு காணொளி இதுவரையில் 26.3 மில்லியன் பார்வைகளையும், 2.3 மில்லியன் லைக்குககைளையும் பெற்றுள்ளது.
திரையுலகில் நட்சத்திர ஜோடியாக மட்டுமல்லாமல், நீண்டகாலமாக ரசிகர்களின் அன்பைப் பெற்றுவரும் தம்பதியாக இருக்கும் சூர்யா–ஜோதிகா, தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நினைவுகூர்ந்து பகிர்ந்த இந்தக் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
விஜய்–அஜித் சந்திப்பு ஏற்படுத்திய பரபரப்புக்கு அடுத்ததாக, சூர்யா–ஜோதிகாவின் 20-ஆவது திருமண நாள் காணொளி புதிய சாதனையுடன் கவனம் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |