Surya -Jyothika: பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரொமான்டிக் போட்டோஷூட்!
suriya - jyothika romantic photoshoot : தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய நட்சத்திர தம்பதிகளில் முன்னணியில் இருக்கும் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோ ஷுட் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் சிறந்த ஜோடியாக வலம் வந்த இவர்கள், இன்றளவும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர்.

சூர்யா–ஜோதிகா
திருமணத்திற்கு முன்பு காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்த சூர்யா–ஜோதிகா ஜோடி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.
அவர்களுக்கிடையேயான இயல்பான காதல் காட்சிகளும், அற்புதமான கெமிஸ்ட்ரியும் அந்தப் படங்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, இருவரும் இதுவரை எந்தத் திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

சூர்யா–ஜோதிகா மீண்டும் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய இருவரும், "நல்ல கதையும், இருவருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களும் அமைந்தால் நிச்சயமாக மீண்டும் இணைந்து நடிப்போம்" என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஒரு பிரபல இதழின் அட்டைப்படத்திற்காக ரொமான்டிக் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
இருவரும் மிகவும் ஸ்டைலிஷாகவும், காதல் நிறைந்த தோற்றத்திலும் காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த புதிய போட்டோஷூட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், "திரையில் எப்போது மீண்டும் ஒன்றாக நடிப்பார்கள்?" என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |