தெளிவாக யோசித்து ரூட்டை போட்ட சூர்யா மகள்.. சீக்கிரமே இயக்குநர்- குஷியில் ரசிகர்கள்
சூர்யா- ஜோதிகா மகள் தியா விரைவில் இயக்கநர் ஆகப்போவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் சூர்யா.
இவர், தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
சென்னையை விட்டு மும்பை பக்கம் சென்ற ஜோதிகா தமிழ் சினிமா பற்றி அவதூறாக பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, சர்ச்சையாக கிளம்பியது.
தாத்தா, அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியம்மா என குடும்பமே நடிகர்களாக உள்ள நிலையில், இயக்குநராக வேண்டும் என்ற முடிவுடன் தியா இருப்பதாக கூறப்படுகிறது.
நல்ல வாய்ப்பு
இந்த நிலையில், மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு கிளம்பிச் சென்று நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சூர்யா மாத்திரம் கலந்து கொண்டார்.
விமான நிலையம் வரை சூர்யாவுடன் மகள் தியா வந்த காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இதனை தொடர்ந்து, சூர்யா அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் அவருடைய மகள் தியா உதவி இயக்குநராக பணியாற்றப் போவதாக கூறப்படுகிறது.
“அம்மா ஜோதிகாவுடன் செல்லாமல், அப்பா சூர்யாவுடன் அவரது படங்களில் பணியாற்ற சென்றால், சீக்கிரமே பெரிய இயக்குநராக தியா மாறிவிடுவார்” என ரசிகர்களும் தியாவை பாராட்டி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |