என் தாயில் வயிற்றில் நான் இருந்த போது... புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் கதறி அழுத சூர்யா
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் சூர்யா கதறி அழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடந்து அவரது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், இன்று நினைவிடம் சென்ற சூர்யா, சற்று நேரம் மவுனமாக நின்றதுடன், அவரது புகைப்படத்தை பார்த்து கதறி அழுதார்.
அவரை கண்ட அங்கிருந்தவர்கள் சோகத்திற்கு ஆளாகினர். புனீத் ராஜ்குமாரின் மரணம் கன்னட திரையுலகினர் மட்டுமின்றி தமிழ் திரையுலகினரையும் கடும் சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
.@suriya_offl broke down emotionally while paying homage to late actor #PuneethRajkumar. pic.twitter.com/p9p27Oqm3f
— Manobala Vijayabalan (@ManobalaV) November 5, 2021
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், புனித்தின் மரணம் நடந்திருக்ககூடாது, அவர் இல்லை என்பதை ஏற்கவே என் மனம் மறுக்கிறது.
நான் என் தாயின் வயிற்றில் 4 மாத குழந்தையாக இருந்த போது, அவர் அவரின் தாய் வயிற்றில் 7 மாத குழந்தையாக இருந்தார் என என் அம்மா கூறியிருக்கிறார்.
எப்போதும் சிரித்த முகத்துடனேயே ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர் புனித்.
அவர் இப்போதும்கூட நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.