வலியால் துடித்த 8 மாத குழந்தை - சுவாச குழாயில் சிக்கியிருந்த ஊக்கை அகற்றிய மருத்துவர்கள்
8 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கியிருந்த ஊக்கை அறுவை சிகிச்சையின் மூலமாக மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மண்ணுத்தி பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி தீபா. இந்த தம்பதிகளுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
இதனிடையே குழந்தை கடந்த 2 மாதங்களாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்கள் சிகிச்சை பலனளிக்காததால், ஸ்கேன் எடுத்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். குழந்தையின் ஸ்கேனை பார்த்தில் சுவாசக் குழாயில் ஒரு ஊக்கு சிக்கி இருப்பது தெரியவந்தது.
இதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் சுவாசக் குழாயில் இருந்த ஊக்கை மருத்துவர்கள் அகற்றினர்.
சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததால் இன்று குழந்தையை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.