நள்ளிரவில் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? கவலையில் குடும்பத்தினர்
நடிகர் ரஜினிகாந்த் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
73 வயதிலும் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக ரஜினிகாந்த் பார்க்கப்படுகின்றார்.
இவர் நடிப்பில் இன்னும் சில நாட்களில் வேட்டையன் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சென்னை-அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர சிகிச்சையில், ரஜினிகாந்திற்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.
நாளைய தினம் இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |