சக்கரை அளவை கட்டுப்படுத்தும் சத்து மிகுந்த உணவுகள்
Diabetes
By Pavi
நீங்கள் நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தினமும் சாப்பிடும் உணவு திட்டத்தில் குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

நீரிழிவு நோய்
தவறான வாழ்க்கை முறைத் தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால், நீரிழிவு நோய் வருகின்றது. இது தற்போது இருக்கும் சமுதாயத்தில் அதிகமாக காணப்படுகின்றது.
உங்களுக்கு நீரிழிவு நோய் வராமல் தவிர்க்க விரும்பினால், உங்கள் வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
உங்களுக்கு இரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த உதவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

சத்து மிகுந்த உணவுகள்
வெந்தய விதைகள் நன்மை பயக்கும்
- வெந்தய விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், வெந்தய விதைகளை மென்று, அந்த வெந்தயத் தண்ணீரைக் குடிக்கவும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தயம், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.
இலவங்கப்பட்டை
- இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை மிகவும் உதவி செய்யும். காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டைக் கஷாயம் அல்லது ஊறவைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் இலவங்கப்பட்டையை மிதமாகவே உட்கொள்ள வேண்டும் மற்றும் இந்த மசாலாவை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கஞ்சி மற்றும் ஓட்ஸ்
- நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் கஞ்சி அல்லது ஓட்ஸ் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கஞ்சி மற்றும் ஓட்ஸ் உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் நன்மை தரும். ஓட்ஸ் கஞ்சியில் கணிசமான அளவு நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US