செட்டிநாடு ஸ்டைல்... நாவூறும் சுவை... இறால் கிரேவி செய்வது எப்படி?
அசைவப் பிரியர்களின் உணவில் முக்கியமாக இருப்பது கடல் உணவுகளே. அதிலும் இறால் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சாதம் என்று எல்லாவற்றிக்கும் வைத்து சாப்பிடும் விதத்தில் இறால் கிரேவியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
இறால்- 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
கிரேவி செய்வதற்கு :
பெரிய வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 3
மிளகுத்தூள்-1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
மல்லித்தழை -கையளவு
செய்முறை
இறாலை அதன் ஓட்டை எடுத்துவிட்டு, நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் இறால் மற்றும் சிறிது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
தண்ணீர் வெளிவந்து வற்றும் வரை இறாலை நன்றாக வதக்கி தனியாக வைத்துக்கொண்டு, பின்பு வேறொரு கடாயினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் விட்டு, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, அடுத்து இறால் சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கி விட வேண்டும்.
3 நிமிடங்கள் கழித்து, மிளகுத்தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். இந்த தூள்களின் கார வாசனை போகும் வரை வதக்கி விட்டு, பின் தண்ணீர் சேர்த்து கடாயை, ஒரு தட்டு போட்டு மூடி வைத்து சுமார் 5 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
5 நிமிடங்களுக்கு பிறகு, கிரேவியில் இருந்து எண்ணெய் பிரிந்து தனியாக வரும் போது , மல்லித்தழையை தூவி இறக்கினால், நாவூறும் செட்டிநாடு இறால் கிரேவி ரெடி!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |