ரஜினிகாந்த் தற்கொலைக்கு முயன்றாரா? தற்போது வெளியாகிய உண்மை
நடிகர் ரஜினிகாந்த் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த். கடைசியாக லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தருந்தார்.
தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் நிலையில், இதன் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்டு வரவேற்பை பெற்றது.
ரஜினிகாந்த் ஆரம்ப காலம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்ததுடன், கூலி வேலை, நடத்துநர் என்று ஏகப்பட்ட பணிகளை செய்துள்ள இவர், தற்போதும் அனைவரிடமும் சகஜமாக பழகுவார்.
தற்கொலை முயற்சி
ரஜினிகாந்த் ஆஃபிஸ் பாய் மற்றும் கூலி வேலை செய்யும் போது வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தாராம்.
ஆனால் சுவரில் வரையப்பட்டிருந்த ஒரு கடவுளின் முகம் அவரது எண்ணத்தை மாற்றியதாம், பின்பே அன்றைய தினம் தூங்க சென்றுள்ளார்.
கனவில் முகப்பொலிவுடன் ஒருவர் அவரை நோக்கி வந்ததாகவும், ஆற்றின் மீது நடந்து வந்தது போலவும், ரஜினியும் கனவில் ஓடியது போன்று தெரிந்ததாம்.
மறுநாள் சுவரில் ராகவேந்திரர் ஓவியம் வரையப்பட்டிருந்த நிலையில், நேராக அங்கு சென்று வேண்டிக்கொண்ட பின்பே அவருக்கு நடத்துனர் வேலை கிடைத்ததாகவும், நடிகராகவும் மாறினாராம்.
அந்த சம்பவம் தான் ராகவேந்திரரின் தீவிர பக்தராக ரஜினிகாந்த்தை மாற்றியதாம். இந்தத் தகவல்தான் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |