Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.
சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்தி வரும் நிலையில், பார்வை குறைபாடு உள்ள சிறுவன் சர்வேஷ் பாடும் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி ஜானகி காலமான நிலையில், அவர் பாடிய பாடல்களை பாடி சிறுவர்கள் அரங்கத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.
சின்னஞ்சிறு கிளியே பாடலை பாடி நடுவர்களை பிரமிக்க வைத்துள்ளார் சர்வேஷ். அதுமட்டுமின்றி மா.கா.பா போன்று தொகுப்பாளர் வேலையை செய்து அவரையும் அரங்கத்தை விட்டு வெளியேற வைத்துள்ளார்.
சர்வேஷின் இந்த திறமையினை அவதானித்த நடுவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை வெளிக்காட்டியுள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |